சரவணபவ எனும் நாமம் - அது
குலச்சுடர் ஒளிதனை ஏற்றும்
நலம் தரும் நம்பிக்கை வளர்க்கும்
உலகினில் இன்பங்கள் பெருக்கும்
இடர்வரும் திசைதனில் ஒலிக்க - அவை
பயம் கொண்டோடிட விரட்டும்
திருமறை தந்திட்ட வேதம் - அதுவே
சரவணபவ எனும் நாமம்.
ஓம் முருகா !
சரவணபவ எனும் நாமம் - அது
குலச்சுடர் ஒளிதனை ஏற்றும்
நலம் தரும் நம்பிக்கை வளர்க்கும்
உலகினில் இன்பங்கள் பெருக்கும்
இடர்வரும் திசைதனில் ஒலிக்க - அவை
பயம் கொண்டோடிட விரட்டும்
திருமறை தந்திட்ட வேதம் - அதுவே
சரவணபவ எனும் நாமம்.
ஓம் முருகா !
சிங்கார வேலனுக்கு செந்தூரில் காவடி
செந்தூர்வாழ் முருகனுக்கு சிங்காரக் காவடி
பால்காவடி பன்னீர்க் காவடி புஷ்ப காவடி
மால்மருகன் முருகனுக்கு மச்சக் காவடி
எத்தனையோ காவடிகள் திருக்குமரன் சன்னதியில்
அத்தனையும் வினைதீர்க்கும் ஐயமே இல்லை
ஓம் முருகா !
காவடிகள் அடிவர கந்தனுக்கு கொண்டாட்டம்
பாற்குடங்கள் ஏந்திவர பரமகுரு கொண்டாட்டம்
கானங்கள் பாடிவர கதிர்வேலன் கொண்டாட்டம்
மலரடியில் மலர்ச் சொரிய மால்மருகன் கொண்டாட்டம்
அரோஹரா கோஷமிட அனைவருக்கும் கொண்டாட்டம்
ஓம் முருகா !
ஆறுமுக வேலன்
ஒருமனதாகி ஓர் நினைவாகி
திருநிறை வேலன் திருவடி நாடி
கால்நடையாக மாமலை ஏறி
கந்தனின் மந்திரம் சொல்லி நடந்து
திருவலம் வந்து அவன் முகம் கண்டு
பரமனின் பாலன் சுடரடி தன்னைப் பணிவோமே
குருபரன் நல்லருள் பெறுவோமே
பொழுது புலர்ந்து இருளும் அகன்று
மலரது மலர்ந்து எழும்பிய காலை
தேகம் அலம்பி பேதம் அகன்றிட
ஓம் எனும் மந்திரம் ஓதியுணர்ந்து
திருவடி வேலன் புகழினைப் பாடி
நறுமலர் குவிந்த சரவணன்பாதம் பணிவோமே
திருவுடையோன் அருள் பெறுவோமே
அம்பிகை பாலன் அருள்தனை வேண்டி
ஆரமுதாம் அவன் ஆலயம் சென்று
சரவணபவ எனும் நாமம் ஒலித்திட
வரமருள் முருகனை மனதில் நிறுத்தி
ஆறுதல் தந்திடும் ஆனந்தரூபன்
ஆதரவாளன் அவனென நம்பி, பணிவோமே
குருவாம் அவனருள் பெறுவோமே
மந்திரமாகும் கந்தன் திருநீறு
அருமருந்தாகும் அற்புதம் அறிந்து
நுதலிலணிந்து மனது நிறைந்து
ஓரடி நூறடி நாடி நடந்து
திருமறை வேந்தன் குகன் திருக்கோலம்
தரிசனம் பெற்று தாளினில் வீழ்ந்து பணிவோமே
சிரகிரியோனருள் பெறுவோமே
அறுமுக வேலன் திருமறை உணர்ந்து
குறுநகை பாலன் அருள்முகம் காண
நெடுவழி நடந்து திருத்தலம் சென்று
பேரருள் புரிவோன் பெருந்துணை வேண்டி
அறிவு தெளிந்து ஆணவம் அகன்று
பட்டுடைத்தலைவன் தாளடித் தாமரை பணிவோமே
மால் மருகன் அருள் பெறுவோமே
எத்திக்கும் காக்கும் வித்தகன் முருகன்
முத்தமிழ் வேந்தன் தத்துவம் அறிந்து
ஆசை அகற்றி நேசம் பெருக்கி
அன்பெனும் அமுதை நெஞ்சில் நிறைத்து
அருட்பெருஞ்சோதி ஒளிதனை வேண்டி
அம்பலவாணன் திருமகன் பாதம் பணிவோமே
எம்பெருமானருள் பெறுவோமே