சிவாய நம
சடைமுடி தன்னில் பிறைதனைச் சூடி
கங்கையைப் பெண்ணாய் கொண்டையில் கொண்டு
அங்கத்தில் பாதியை சங்கரிக்களித்து
வரம்கேட்டு வந்தோர்க்கு நிறைவூட்டும் இறைவன் நீ
சிவ சிவ நாமம் பலமுறை கூறி
நலமுடன் வாழ வரமருள் சிவனே!
சிவாய நம
சடைமுடி தன்னில் பிறைதனைச் சூடி
கங்கையைப் பெண்ணாய் கொண்டையில் கொண்டு
அங்கத்தில் பாதியை சங்கரிக்களித்து
வரம்கேட்டு வந்தோர்க்கு நிறைவூட்டும் இறைவன் நீ
சிவ சிவ நாமம் பலமுறை கூறி
நலமுடன் வாழ வரமருள் சிவனே!
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய
அன்பினைத் தந்து அகந்தையை அழிக்கும் ஓம் நமசிவாய
அறிவினைத் தந்து நலிவினைத் தடுக்கும் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
நன்மைகள் தந்து நலன்களைப் பெருக்கும் ஓம் நமசிவாய
இன்பங்கள் தந்து துன்பங்கள் விலக்கும் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய
அமைதியைத் தந்து அழிவினைத் தடுக்கும் ஓம் நமசிவாய
சுடரொளி காட்டி இருளினை நீக்கும் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
யோகங்கள் தந்து சோகங்கள் அறுக்கும் ஓம் நமசிவாய
தயவுடன் காத்து தடைகளை விலக்கும் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய
தெளிவினைத் தந்து சிறந்திடச் செய்யும் ஓம் நமசிவாய
வலிமையைத்தந்து வல்வினை ஓட்டும் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
துணிவினைத் தந்து துயர்களைப் போக்கும் ஓம் நமசிவாய
மகிமை அறிந்தோம் மனதில் மகிழ்ந்தோம் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய